Sunday, September 4, 2011

"தண்ணீர்" தேசம்

வைரமுத்துவின் அழகிய தலைப்பு.

இன்றைய சூழ்நிலையில் இரண்டாம் பாகம் வெளி வந்தால் அதன் சாரம் எதை பற்றி தெரியுமா இருக்கும்? TASMACயைப் பற்றிதான். அது தானே இப்போதைக்கு தமிழ் நாட்டை வாழ வைக்கும் அக்சய பாத்திரம்.

கல் இறக்குவதை எதிர்த்து தனது தோப்பை அழித்தார் பெரியார். இன்று தன் தொப்பையை வளர்க்கத் தொண்டர் வாயில் உத்துகிறான் மதுவை, தலைவன். 80'களில் கள்ள சாராயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கமே குத்தகை எடுத்து சாராய கடை நடத்தியது. பின்பு அது ஒழிக்கப்பட்டு மதுக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. பின்பு BAR,TASMAC,Elite bar,Club என்று நல்ல முன்னேற்றம் கண்ட துறை.

“மது விலக்கு” வேணும்னு சொல்ற அய்யா அவர்களின் மாவட்டத்தில தான் நிறைய சாராய சாவுகள்.

“மது விலக்கு” - இந்த வார்த்தையை பயன் படுத்தக்கூட அரசு பயப்புடுது.இருக்காத பின்ன ?? வருமானம் தர்ற மகாலக்ஷ்மிய யாரவது ஓடி போய்டுன்னு சொல்ல முடியுமா?

ஊருக்குள்ள செய்ய முடியாத எல்லா காரியத்தையும் வெளியூர் வந்தாதான் செய்ய முடியும். சென்னை, பெங்களூர் இங்கெல்லாம் வேல பார்குற நம்ம பய புள்ள எல்லாம் குடியும் குடுதனமுமாதான் வாழுது. வண்டி வாங்குன Treat , மேனேஜர் திட்டுன Treat, Manager’a ஒரு கை நீ பார்த்துடாலும் Treat, அப்படி எப்படின்னு எல்லாத்துக்கும் Treat. இதெல்லாம் நகரத்துல தான்னு இல்ல. இப்பெல்லாம் காந்தி கனவுக் கண்ட, கிராம முன்னேற்றம் வந்தாச்சு.

சாவு வீடு, கல்யாண வீடு, சடங்கு வீடு, கருமாதி இப்படி எல்லாத்துலயும் தண்ணி. ஆனா ஒன்னு, வீட்டுக்கு நீ குடிக்குறது தெரியாத வரையில்தான் அது தப்பு. தெரிஞ்சிட்ட omelette வீட்டுலே போடா சொல்லலாம். ஆணாதிக்கம் அதிகம் உள்ள கிராமங்களில், பெண்களுக்கோ கணவர்கள் குடிப்பது அன்றாட நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்ற மனநிலை தான். இந்த எண்ணம், முன்பெல்லாம் தினக்கூலி வேலை செய்யும் மக்கள் மத்தியில் மட்டுமே இருந்தது, இப்போதெல்லாம் நடுத்தர பெண்களின் மத்தியிலும்..

(எழுதபடாதச் சட்டத்துல ஒன்னு, வெளிநாட்டுல இருந்து வந்த கண்டிப்பா சரக்கோட தான் வரணும்.)
ஒரு அவசர வெளி காரணமா சிங்கப்பூர்ல இருந்து திருச்சி வந்தேன். வருசையில் நிற்கும் போது எண்ணி பார்த்தேன், சுமார் 10 - 15 நபர்கள் கையில் மட்டுமே சரக்கு பை இல்லை. (பொதுவா விமான நிலையத்துல வாங்குற எல்லாத்தையும் கையுல வச்சிக்கலாம், பையில போட முடியாது). பொதுவாக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இந்திய பெண்கள் அதிகமானோர் பணிப்பெண்கள்.சமையல் வேலை செய்தோ அல்லது வீட்டு வேலை செய்தோ, இந்தியாவில் இருக்கும் குடும்பத்தை நடத்துபவள். இவர்கள் விமான நிலையத்தில் மதுவைத் தரம் பார்த்துத் தேர்ந்தெடுத்து வாங்கிய கட்சி இருக்கே, காண கண் கோடி வேண்டும். முதல் நாளே கணவனோ, சகோதரனோ BRAND NAME சொல்லி இருக்கக்கூடும்.

ஒவ்வொரு ஆண்டும் நாம் எதில் வரலாறு படைக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக விழாக்காலங்களில் மது விற்பனையில். நமது பிரதான போட்டியாளர் நமது அண்டை மாநிலம் கேரளம்.

ஆஹா என்ன வளர்ச்சி ... 20% கடந்த ஆண்டு


Fiscal Year Revenue in Crores % Change
2002 - 03 2,828.09
2003 - 04 3,639 28.67%

2004 - 05 4,872 33.88%

2005 - 06 6,086.95 24.94%

2006 - 07 7,300 19.93%

2007 - 08 8,822 20.85%

2008 - 09 10,601.5 20.17%

2009 - 10 12,491 17.82%

2010 - 11 14,965 19.80%

உபயம் : http://en.wikipedia.org/wiki/TASMAC

அலுவலகங்களில் நீங்கள் குடிக்கவில்லை என்றால் ஓரங்கட்டப்படுவீர்கள். புகைபிடித்தால் தண்ணியடித்தால் நண்பர்கள் வட்டாரம் கூடுமாம். (வினவியபோது காரணம் கூறப்பட்டது).அனால் ஒன்று, தண்ணி அடிக்கும் நபர்கள் அழைத்தால் அவர்களுடன் செல்லுங்கள், அவர்கள் அடிக்கும் கும்மாளத்தையும் உளறல்களையும் அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

குஜராத்தை போல் வளர்ச்சியும் வேண்டும், மது விலக்கும் வேண்டும்.

Sunday, July 17, 2011

Delhi Belly - அச்சா ஹே

டெல்லி பெல்லி - வயறு இல்ல !! வாயும் பெருசு தான் <>

படம் பாக்க போறப்ப எல்லா கெட்ட வார்த்தையும் படிச்சு மனப்பாடம் பண்ணிட்டு போங்கப்பா, இல்லன ஒன்னும் புரியாது .

Googleல போய் “Hindi bad words” ன்னு போடுங்க, சும்மா கொட்டும்.

நம்ப சினிமா எவ்வளவு முன்னேறி இருந்தாலும், எதார்த்த சினிமாவுல கூட சில வார்த்தைகள், வசனங்கள் வர முடியாது (விட மாட்டாங்க) .

ஆனா இந்த படத்துல, இது எல்லாத்தையும் தாண்டியாச்சு. படம் ஆரம்பிச்சதுல இருந்து முடியுற வரையும் ம்ம்ம்ம்….. சென்சர் போர்டுக்கு நல்ல வேலை ( நமக்கும் தான் ).

உண்மையுலேயே கீழ சொல்ற சீன் எல்லாம் எடுக்கும் போது, ரூம் போட்டு யோசிச்சி இருப்பாங்க.

1. விலை மாதுவ படம் எடுத்த பிறகு, புகைப்படக்காரன் செய்யும் சின்ன சில்மிஷம்
2. காதலியின் திருமணத்தில் புகுந்து கொலப்புவது ( கனவு )
3. ஹோட்டல் ரூம்ல செய்யும் குறும்புக்கப்பறம் ஹீரோவுக்கு ஏற்படும் காம உணர்ச்சி

ஸ்க்ரீன்ல காட்ட சத்தியமா தைரியம் வேணும்.

சும்மா டெல்லி தெருவுல பூந்து வந்த மாதிரி இருந்தது. நம்ம கிட்ட இருக்க பெரிய பிரச்சன என்னன்னா எல்லாம் பண்ணுவோம் எல்லாம் பேசுவோம். ஆனா அத யாராவது படத்துல காட்டிட்டா, ஐயோ! அம்மா! எங்க கலாசாரம் , பண்பாடு, இறையாண்மைன்னு கத்துவோம்.

கொஞ்சம் வெளிய வாங்கப்பா !!

படம் கொஞ்ச நேரம் தான், Have fun for 1.30 Hours, nothing else.
Bachelor படம், enjoy பண்ணலாம்.

Saturday, July 9, 2011

மொழிப்பற்று

ஆங்கில மொழி கூற்று ஒன்று "My Mother is the best mother in the world".

என் தாய் சிறந்தவள் என்று எல்லோராலும் சொல்ல முடியும். ஆனால் என் தாய் மட்டும் சிறந்தவள் என்று சொல்ல முடியாது.

பாரதி தன் பதிவில் " யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல் எங்கும் காணும் " என்று கூறினான். எவன் ஒருவன் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மொழிகள் அறிவானோ, அவனால் அம்மொழிகளுக்குள் உள்ள சிறப்பை ஒற்று பார்க்க இயலும். சிறப்புகளை கூறுவது என்பது வேறு, நம்மொழியை மட்டுமே பற்றிப் பேசுவது என்பது வேறு.

இணைய நண்பன் ஒருவன் : தாய் மொழிப் பற்றிய கவிதை

" மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுன்டு என்பதை மறந்து
மாற்று மொழி கலப்படம் வேண்டா என்று போர்க்கொடி தூக்குவர் ;"

" வாழையடி வாழையாய் வந்த வம்சம் என்று மாருதட்டிக் கொண்டு - இப்பொழுது
வாழை மரத் தோட்டத்தில் ஒற்றை ஆலமரமாய் நிற்கின்றான் தமிழன்."


மொழியின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் கண்டிப்பாக அவசியம். அனால் மற்றவர்களிடம் அவர்கள் மொழியை தரம் தாழ்த்திவது, நாகரீகம் அற்ற செயல்.

என் மொழி ஆளுமை என்னை சுற்றி இருப்பவர்களை கவர வேண்டும் என்று நினைப்பவன் நான். நம்மால் சிலர் தமிழில் பேசுகிறார்கள் என்றால், இன்று உள்ள சூழலில் அதுவே நம் மொழிக்கு நாம் செய்யும் மிக பெரிய சேவை.

எத்தனைப் பேர் இன்று தமிழில் எழுதும் பழக்கம் உடையவர்கள்? நம் சுற்றத்தில் இக்கேள்வியை முன் வையுங்கள். விரல் விட்டு என்ன கூடும் அளவு கூட இருக்க மாட்டார்கள்.

எழுதுகோல்( அட நம்ப பேனவா ??? ) கொண்டே எழுதுவதே இல்லை என்றானபோது, தாய் மொழியில் (!!) கொஞ்சம் கஷ்டம் தான்.

தமிழில் எழுதும் வழக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உடையவன் நான் ( பின்குறிப்பு - திருடி படிக்க வேண்டும் என்று நினைபவர்களுக்கு : சுவாரஸ்யம் எதுவும் இருக்காது !! ).

இதில் நிறைய நன்மைகளும் உண்டு. பொழுதுபோகவில்லை அல்லது காலம் கடத்த வேண்டும் என்றால், மூன்று அல்லது நான்கு வருடம் முன்பு உள்ள நாட்குறிப்பை எடுத்து படிக்கலாம். சில நேரங்களில் நம்மை அறியாமல் சிரித்து வரும். (சமீபத்தில் ஐந்து வருடம் முன்பு உள்ள ஏடுகளை புரட்டினேன். கையில் சிக்கியது,என் முதல் விமான பயணம்.
நான் என்ன விமானத்தில் பறந்தேன்? எப்போது? என்றெல்லாம் படித்தபோது, காட்சிகள் கண் முன்னால் வந்து மறையும் )

எழுதும் போது தான், நாம் மொழியில் எவ்வளவுப் பிழை செய்கிறோம் என்று தெரியும். வார்த்தைகள் அறவே வராது, இரண்டு சுழி னா வா? மூன்று சுழி ணா வா? என்ற குழப்பம் வேறு. இது முடியவில்லை என்றால் படிப்பாட்ற்றலை வளர்க்கலாம்.

நமக்கு உகந்த எதாவது ஒரு புத்தகம் எடுத்துப் படித்தாலே மொழியின் சிறப்புகளைப் ஓரளவுப் பெற முடியும். நாம் முதலில் கற்போம், பின்பு மொழிப்பற்றை வெளிப்படுத்துவோம்.

Tamil Book collection on Project Madurai

This is the dream page and site for the soft book readers.
Team PROJECT MADURAI doing their job commendably and we should appreciate them.

There are collections which you may not get from the book shops in tamilnadu. Even if the books are available, the shop keepers doesn't know where it is.

If time permits, do scan the site and check the collections.

As expected, the volunteers page shows everyone (almost) from outside tamilnadu.

Here is the URL :
http://www.projectmadurai.org/pmworks.html