ஆங்கில மொழி கூற்று ஒன்று "My Mother is the best mother in the world".
என் தாய் சிறந்தவள் என்று எல்லோராலும் சொல்ல முடியும். ஆனால் என் தாய் மட்டும் சிறந்தவள் என்று சொல்ல முடியாது.
பாரதி தன் பதிவில் " யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல் எங்கும் காணும் " என்று கூறினான். எவன் ஒருவன் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மொழிகள் அறிவானோ, அவனால் அம்மொழிகளுக்குள் உள்ள சிறப்பை ஒற்று பார்க்க இயலும். சிறப்புகளை கூறுவது என்பது வேறு, நம்மொழியை மட்டுமே பற்றிப் பேசுவது என்பது வேறு.
இணைய நண்பன் ஒருவன் : தாய் மொழிப் பற்றிய கவிதை
" மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுன்டு என்பதை மறந்து
மாற்று மொழி கலப்படம் வேண்டா என்று போர்க்கொடி தூக்குவர் ;"
" வாழையடி வாழையாய் வந்த வம்சம் என்று மாருதட்டிக் கொண்டு - இப்பொழுது
வாழை மரத் தோட்டத்தில் ஒற்றை ஆலமரமாய் நிற்கின்றான் தமிழன்."
மொழியின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு தனி மனிதனின் பங்கும் கண்டிப்பாக அவசியம். அனால் மற்றவர்களிடம் அவர்கள் மொழியை தரம் தாழ்த்திவது, நாகரீகம் அற்ற செயல்.
என் மொழி ஆளுமை என்னை சுற்றி இருப்பவர்களை கவர வேண்டும் என்று நினைப்பவன் நான். நம்மால் சிலர் தமிழில் பேசுகிறார்கள் என்றால், இன்று உள்ள சூழலில் அதுவே நம் மொழிக்கு நாம் செய்யும் மிக பெரிய சேவை.
எத்தனைப் பேர் இன்று தமிழில் எழுதும் பழக்கம் உடையவர்கள்? நம் சுற்றத்தில் இக்கேள்வியை முன் வையுங்கள். விரல் விட்டு என்ன கூடும் அளவு கூட இருக்க மாட்டார்கள்.
எழுதுகோல்( அட நம்ப பேனவா ??? ) கொண்டே எழுதுவதே இல்லை என்றானபோது, தாய் மொழியில் (!!) கொஞ்சம் கஷ்டம் தான்.
தமிழில் எழுதும் வழக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உடையவன் நான் ( பின்குறிப்பு - திருடி படிக்க வேண்டும் என்று நினைபவர்களுக்கு : சுவாரஸ்யம் எதுவும் இருக்காது !! ).
இதில் நிறைய நன்மைகளும் உண்டு. பொழுதுபோகவில்லை அல்லது காலம் கடத்த வேண்டும் என்றால், மூன்று அல்லது நான்கு வருடம் முன்பு உள்ள நாட்குறிப்பை எடுத்து படிக்கலாம். சில நேரங்களில் நம்மை அறியாமல் சிரித்து வரும். (சமீபத்தில் ஐந்து வருடம் முன்பு உள்ள ஏடுகளை புரட்டினேன். கையில் சிக்கியது,என் முதல் விமான பயணம்.
நான் என்ன விமானத்தில் பறந்தேன்? எப்போது? என்றெல்லாம் படித்தபோது, காட்சிகள் கண் முன்னால் வந்து மறையும் )
எழுதும் போது தான், நாம் மொழியில் எவ்வளவுப் பிழை செய்கிறோம் என்று தெரியும். வார்த்தைகள் அறவே வராது, இரண்டு சுழி னா வா? மூன்று சுழி ணா வா? என்ற குழப்பம் வேறு. இது முடியவில்லை என்றால் படிப்பாட்ற்றலை வளர்க்கலாம்.
நமக்கு உகந்த எதாவது ஒரு புத்தகம் எடுத்துப் படித்தாலே மொழியின் சிறப்புகளைப் ஓரளவுப் பெற முடியும். நாம் முதலில் கற்போம், பின்பு மொழிப்பற்றை வெளிப்படுத்துவோம்.
Awesome,Excellent one. Lets spread!
ReplyDeleteKeep up your good one
~Chandra
இது உனது முதல் வலைப்பதிவு என அறிவேன். மேலும் உன் முயற்சிகள் பாராட்டுக்களை பெற எனது உளம்கனிந்த வாழ்த்துக்கள். இனி வரும் வலைப்பதிவுகளில் இதில் உள்ள சிறு சிறு எழுத்துப்பிழைகளையும் தவிர்க்கவும்.
ReplyDeleteநன்றி,
www.google.com/transliterate & www.google.com/transliterate
- Raghavendran.V.
இந்த வலைப்பதிவின் பெயர் மிகவும் நன்றாக உள்ளது. மேலும் உன் இலக்கிய மற்றும் அரசியல் கருத்துக்களை இதில் பகிர்ந்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும். இது என் பரிந்துரை.
ReplyDeleteநன்றி,
www.google.com/transliterate & www.google.com/transliterate
- Raghavendran.V.